தேவையான பொருள்கள்

அவல் -1கப்; உருண்டை வெல்லம் ( பொடித்தத்து ) 1 1/4 கப்,துருவிய தேங்காய் 1/2 கப்,ஏலக்காய் பொடி சிறிதளவு,முந்திரி பருப்பு 10,மஞ்சள் பொடி 1/ 4 ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, நெய் தேவையான அளவு.

(வெல்ல பாகு.) 1 1/4 கப் வெல்லத்தை 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மண் போக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை 15 நிமிடம் கொதிக்க வைத்தால் போதும்.

செய்முறை

1) வெறும் வாணலியில் அவலை சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

2) வறுத்த அவலை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

3) பொடித்த அவலில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.சூடான தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

4) கையில் பிடித்தால் பிடிக்க வர வேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும். கலந்த மாவை 1/2 மணி மூடி வைக்கவும்.

5) உருண்டை வெல்லத்தில் பாகு வைக்கவும். மிக கெட்டி பாகு அவசியம் இல்லை.

6) பாகை பொடித்த அவலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.

7) நெய்யில் முந்திரி பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து சிவக்க வறுத்து கலந்து கொள்ளவும். ஏலக்காய் பொடி தூவி கலந்தால் அவல் புட்டு ரெடி.